ஸ்ரீ ஓசைநாயகி உடனுறை ஸ்ரீ தாளபுரீஸ்வர சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம்- 2017


சீர்காழி திருக்கோலக்காவில் அமைந்திருக்கும் ஸ்ரீ தாளபுரீஸ்வரர், ஓசைநாயகி அம்பாள் திருக்கோவிலின் சிறப்புக்கள் பற்றிய குறிப்புக்கள் இத்துடன் இணைக்கப் பெற்றுள்ளன. இந்த விவரங்கள் www.osainayaki.org என்ற இணைய தளத்திலும் உள்ளன.

பேச்சுத் திறன் இல்லாத குழைந்தைகள், கேட்கும் திறன் குறைபாடு உள்ளவர்கள் பலர் அம்பாள் அருளால் குறைகள் நீங்கப் பெற்றுள்ளார்கள். பிரசங்கம் செய்பவர்கள், வர்ணனையாளர்கள், பேச்சாளர்கள், இசை பயில்பவர்கள், இசைக் கருவி வாசிப்பவர்கள் பலர் இந்தக் கோவிலுக்கு வந்து, பிரார்த்தித்து அம்பாளின் அருள் பெற்று வளமடைந்துள்ளார்கள்.

இத் திருக்கோவிலில் தேவகோட்டை ராம.மெ.சித. குடும்பத்தார்களால் அவர்கள் சொந்த பணத்தில் முழுவதுமாக கருங்கல் திருப்பணி செய்யப் பெற்றுள்ளது. இத்திருக்கோவில் சுமார் 150 வருடங்களாக, எங்கள் குடும்ப நிர்வாகத்தில் உள்ளது. இதற்குமுன் 1985-ஆம் ஆண்டு திருப்பணி செய்து குடமுழுக்கு செய்விக்க பட்டது. தற்போது மீண்டும் திருப்பணிகள் செய்வித்து குடமுழுக்கு செய்ய வேண்டி பாலஸ்தாபனம் நடை பெற்று திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

தங்களுக்கு தெரிந்த ஆர்வமுள்ள நண்பர்கள், பக்தர்களிடம் இத்தகவல்களைத் தெரிவித்து அவர்களை இத்திருப்பணியில் பங்குபெறச் செய்ய வேண்டுகிறேன்திருப்பணிகளின் மதிப்பீடுகளை இத்துடன் இணைத்திருக்கிறோம்..


1 சுவாமி விமானம், அம்பாள் விமானம், விநாயகர் விமானம், முருகன் விமானம், லட்சுமி விமானம், சண்டிகேஸ்வரர் விமானம், சண்டிகேஸ்வரி விமானம், சனீஸ்வரர் விமானம், அம்பாள் சந்நிதியில் உள்ள விநாயகர் விமானம், முருகன் விமானம், சுவாமி சந்நிதி மகா மண்டபம் முன்பு உள்ள சுதைச் சிற்பங்கள், கோடி பூதங்கள், இவை அனைத்தும் புதியதாக செய்வித்து வேலைகள் முடிந்து விட்டன Rs.25,00,000
2 திருமதில் சுவர் 250 அடி 1½ அடி அகலம் 15 அடி உயரத்தில் புதிதாக கட்டி முடிக்க பெற்றுள்ளது . Rs.15,00,000
3 சுமார் 500 அடி நீளத்தில் 15 அடி உயரத்திற்கு பழைய திருமதில் சுவரில் இருபக்கமும் உள்ள பழைய பூச்சுக்களை அகற்றி புதிதாக பூசி உள்ளது. Rs.5,00,000
4 புதிதாக அலுவலக அறை 200 சதுர அடியும், ஆவண அறை 250 சதுர அடியும் கட்டி முடிக்க பெற்றுள்ளது Rs.6,00,000
5 மடைப்பள்ளி சுமார் 450 சதுர அடியில் கட்டி முடிக்க பெற்றுள்ளது . Rs.5,00,000
6 கோவிலில் புதிதாக CCTV கேமரா, கள்வர் எச்சரிக்கை மணி அமைத்து வேலைகள் முடிந்து விட்டன . Rs.1,00,000

இதுவரை 60 லட்ச ரூபாய் செலவாகி உள்ளது


7 அனைத்து விமானங்கள், கட்டிடங்கள் மதில் சுவர் ஆகியவற்றிற்கு வர்ணங்கள் வைத்தல் Rs.6,00,000
8 முன் முகப்பு கோபுரம் புதுப்பித்தல் Rs.6,00,000
9 அனைத்து தளங்களிலும் புதிதாக வாட்டர் ப்ரூபிங் செய்து தட்டோடுகள் அமைத்தல் Rs.2,50,000
10 கோவில் விக்ரஹங்கள் பாதுகாப்பு மற்றும் சுவாமி, அம்பாள் சந்நிதிகளில் அர்த்த மண்டபத்தில் பாதுகாப்பு பெட்டகங்கள் , சுவாமி, அம்பாள் சந்நிதிகளில் உண்டியல் வைத்தல் - சென்னை உமா லாக்கர்ஸில் ஆர்டர் செய்து பெறப் பட்டுள்ளது. பணம் கொடுக்க வேண்டும். Rs.5,00,000
11 கோவில் அலுவலகத்திற்கு 3 மேஜைகள், 15 நாற்காலிகள், 3 இரும்பு அலமாரிகள், 7 மின் விசிறிகள் வாங்க வேண்டும் . Rs.60,000
12 கோவிலுக்கு தென்புறம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நந்தவனம், ஆழ்துளைக் கிணறு அமைத்தல் Rs.4,00,000
13 கோவிலுக்கு வட புறம் உள்ள சுமார் 9000 சதுர அடியில் சுற்றிவர 4 அடியில் சுவர் அமைத்து தகர மேற்கூரை மற்றும் தளம் அமைத்தல் (optional) Rs.35,00,000
14 6000 சதுர அடியில் சமையல் கூடமும், சாப்பாட்டுக்கு கூடமும் அமைத்தல், தளம் அமைத்தல் (optional) Rs.15,00,000
15 14,15 பணிகள் செய்யாமல் இருந்தால் கொட்டகை வாடகை Rs..4,00,000 செலவு செய்ய வேண்டி வரும்
16 குடிதண்ணீர் R.O System புதிதாக வாங்க வேண்டும்
17 7,8,9,10,11,12,13 ஆகியவற்றுக்கான மொத்த செலவு Rs. 28,00,000 இதர செலவுகள் Rs. 2,00,000 மொத்தம் Rs.30,00,000

இந்த வேலைகளை உடனடியாக முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒரு மாதத்தில் முடித்தால் தான் அடுத்து கும்பாபிஷேக வேலைகளை ஆரம்பிக்க இயலும்.
கும்பாபிஷேகம் : ஹேவிளம்பி வருடம் ஆனி -14(28.06.2017) துவங்கி ஆனி -21(05.07.2017) அன்று கும்பாபிஷேகம் நடைபெற உத்தேசித்துள்ளது.


தற்போது அவசரமாகவும், அவசியமாகவும் திருப்பணிக்கு ரூ.30,00,000(முப்பது லட்சம்) தேவை உள்ளது. தாங்களும், தங்கள் நண்பர்கள், தெரிந்தவர்களிடம் சொல்லி, திருப்பணியில் பங்கு பெற வேண்டுகிறோம்.திருப்பணிகளை 14.04.2017க்குள் முடித்தால் தான் கும்பாபிஷேகம் சம்பந்தமான திட்டமிடல் செய்ய முடியும்.திருப்பணியில் பங்கு பெற விரும்புபவர்கள் - R. வைரவன் -கைப்பேசி -9444213933, 9842228853 இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.


கீழ்க் கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம் :
1.R. வைரவன், பிளாட் எண் 6, அபினவ் பிளாசா, 23, முதல் பிரதான சாலை, ஜெத் நகர், மந்தைவெளி , சென்னை 600028
2.R.வைரவன் , 4, சத்திரத்தார் தெரு, தேவகோட்டை -630302
3.R. வைரவன், பரம்பரை அறங்காவலர், அ /மி தாளபுரீஸ்வர சுவாமி திருக்கோவில், திருக்கோலக்கா , சீர்காழி -609110

கும்பாபிஷேக குறிப்பு

 • • பத்திரிகை அச்சடித்தல், அனுப்புதல்
 • • யாகசாலைக்கு கொட்டகை அமைத்தல்
 • • யாகசாலை அலங்காரம் (சுவாமி, அம்பாள், நவாக்னி)
 • • குண்டம் வேதிகை கட்டுதல்
 • • சிவாச்சாரியார் (60) பேருக்கு தட்சிணை
 • • வேத பாராயணம் (20) பேருக்கு தட்சிணை
 • • சிவாச்சாரியார் , வேத பாராயணம்(80) வஸ்திரம்
 • • கோவில் மூர்த்திகள் - பரி வட்டம், சுவாமி பட்டு, அம்பாள் பட்டு புடைவை, பூர்ணாகுதி பட்டு வஸ்திரங்கள், திருக்கல்யாண வஸ்திரங்கள் திருமுறை பாராயணம் (தட்சிணை, வஸ்திரம்)
 • • அஷ்டபந்தன மருந்து
 • • ஹோம நெய் (100 கிலோ)
 • • ஷண்ணவதி ஹோம திரவிய சாமான்கள், குண்டம் ஆரம்ப ஹோமம் உள்பட ஆறு காலத்திற்கு புஷ்பம் - பூர்வாங்க பூஜை, திருக்கல்யாணம், பஞ்ச மூர்த்தி உலா உள்பட வேத விற்பன்னர்கள், சிவாச்சாரியார்கள் -உணவு
 • • இதர விருந்தினர் மற்றும் அன்ன தானம்
 • • யாக சாலை, மடைப் பள்ளி - பரிசாரகம்
 • • நாதஸ்வரம், மேளம்
 • • ஒளி ,ஒலி, மைக் செட் , சீரியல் செட், ஜெனெரேட்டர் ஆறு நாள்கள்
 • • திருக்கல்யாணம்
 • • இரவு- பஞ்ச மூர்த்திகள் உலா
 • • சிப்பந்திகள் ரொக்க செலவு
 • • போட்டோ, வீடியோ
 • • பழங்கள்

Sri Osainayaki samedha Sri Thaalpureeswara swami Temple Kumbhabishekam -2017


Greatness of Sri Osainayaki samedha Sri Thaalapureeswara swami temple situated in Thirukkolakka, Seerkazhi is given below. More details are available in Temple website : www.osainayaki.org.

Many devotees and Children with speech defects, and hearing impairments got their defects cured by Blessings of Ambal. Great Orators, Commentators, Music learners and Musicians come here and receive Blessings of Ambal and achieved greater heights in their career.

Granite work of this temple was executed by Devakottai Rama.ne.Chidha family with their own wealth. This temple is under our family’s management for past 150 years. In 1985, the temple Kumbhabishekam was performed. Now, again, Kumbhabishekam is planned in 2017 and Thuppani works are progressing.

Request you, your friends and known devotees to take part in this noble function.Enclosed herewith Thirupani estimates


1 Swami Vimanam, Ambal Vimanam, Vinayagar Vimanam, Murugan Vimanam, Chandikeswarar Vimanam, Chandikeswari Vimanam, Saneeswarar Vimanam, Inside Ambal sannidhi- Vinayagar Vimanam, Murugan Vimanam, Scuptures in front of Swami Maha Mandapam, Kodi Boothas- All refurbished and completed Rs.25,00,000
2 Compound wall 250 feet long, 1½ feet wide 15 feet height - built and completed. Rs.15,00,000
3 For 500 feet length, 15 feet height - Compound wall is replastered both sides. Rs.5,00,000
4 New office for 200 Sq.feet and record room for 250 sq.feet built. Rs.6,00,000
5 For 450 Sq.feet, kitchen is newly built. Rs.5,00,000
6 Burgler Alarm and CCTV Camera set up completed. Rs.1,00,000

So far, Rs. 60 Lakhs is spent.


7 Painting of Vimanams, Building and walls . Rs.6,00,000
8 Front tower refurbishing. Rs.6,00,000
9 New cable and wiring works. Rs.6,00,000
10 Water proofing and tiling of roofs. Rs.2,50,000
11 Lockers and protection for Vigrahams, Swami and Ambal Hundi are received from Uma lockers, Chennai. Need to pay them . Rs.5,00,000
12 Office furniture -3 tables 15 chiars, 3 steel cupboards 7 மfans to be procured. Rs.60,000
13 Removal of encroachments, Fencing, Gardens and Borewell arrangement to be done. Rs.4,00,000
14 On northside 9000 sq.feet. Shed with 4 feet wall construction (optional). Rs.35,00,000
15 Kitchen and dining hall for 6000 Sq.feet.(optional) Rs.15,00,000
16 14,15 -If these actions are not done, need to pay rent of Rs.4,00,000 during Kumbhabishekam.
17 New Drining water RO system.
18 For 7,8,9,10,11,12,13 total expense Rs. 28,00,000 Miscellaneous Rs. 2,00,000 Total expenses Rs.30,00,000.

These actions to be completed within 4 weeks time to plan for Kumbhabishekam
Kumbhabishekam is planned on Hevilambhi Year Aani -14 ( 28.06.2017) to Aani- 21(05.07.2017) .


For completing essential activities, we need Rs. 30,00,000 ( Thirty Lakhs) Request you and your friends to take part in this Thirupani. We need to complete these actions by 14.04.2017 for proper planning of Kumbhabishekam. Devotees who wish to take part in this Thiruppani, please contact R. Vairavan-Mobile -9444213933, 9842228853


You can reach him in the following addresses:
1. R. Vairavan, Flat No:6, Abhinav Plaza, 23, 1st main Road, Jeth Nagar, Mandhaiveli, Chennai- 600028
2.R. Vairavan , 4, Chathirathaar Street, Devakottai -630302
3.R. Vairavan , Trustee, , Sri Thaalapureeswarar Temple, Thirukolakka, Seerkazhi -609110

Details - Kumbhabishekam