Temple Details

Thirukolakka temple is the 15th “Padal petra thalam”. Temples on which Tamil poets and Saints – Appar, Sundarar, Thirugnana sambandar and Manikka Vaasagar –wrote and sang Thevaram songs.

Thirukkolakka temple was a brick construction during Chola period. Later Nagarathar re-built the same using Granites. Temple is 230 feet in length East-west and 155feet in width in North-south.

Surya pushkarini (theertham)is in front of temple. The Temple has Swami sannidhi and Ambal sannidhi with 4 prakaarams.

Swami was known as Sri Aragwaneswarer and Ambal was known as Apeethagujaambal before 7th century. The place was Kondrai forest.

With Sri Taalapureeswarar and Sri Osainayaki, Periya pillaiyar, Mahalakshmi, Sri Valli Devasena Subramanyam, Sri Dakshinamurthy, Sri Suryamurthy, Sri Chandra Murthy, Arulmigu Nalvar, and Pancha lingas blessing all devotees.

In front of temple, Surya pushkarini radiates cool blessings. In the southeastern side, is the Sthala Viruksham ‐ Kondrai tree, grown from a single root into 3 Kondrai trees indicating the presence of Thrimurthis – Brahma, Vishnu and Maheshwara

Thirugnanasambandar:

In Saiva tradition, Thirugnanasambandar is considered as one of the important Saints and poets. He is considered as Avathara of Karthikeya- Shiva’s son.

He was born to Sivapathahridayar and Bhagavathi ammal. When he was 3 years, he went to Sirkazhi Bramhapureeswarar temple with his father. When his father immersed in water of Bramha theertham for bathing, the young Sambandar upon being unable to find him cried and called out ‘Amme Appa’ ( mother, father ) looking at the Gopura Shikara. Upon hearing the cry of the child, the all merciful Lord Shiva requested his wife, Goddess Uma to feed him. The Devi gave her Breast milk in a golden bowl to Gnanasambadar to fulfill Lord Shiva’s wish.

On finishing bathing rituals, Shivapadhahridayar, saw the child with milk dripping from the mouth, got angry as this was against orthodox family values.

He reprimanded the child asking him who gave him the milk. Responding to this, the divine Sambandar, gazing at the Gopuram started singing the Thevaram song –“Thodudaya Seviyan” Everybody present there listened to the Thevaram in stupefied silence And spontaneously prostrated before Gnanasambandar

The following day, Thirugnanasambandar set out on his pilgrimage to the various Lord Shiva temples. He reached the Thirokkolaka temple situated in the Kondrai Vanam (forest with Kondrai trees). Upon seeing the Lord, he sang the Thevaram song beginning with the words “Madaiyil Vaalai Paaya”, clapping his bare hands in synchrony with the song. On seeing Sambandar’s tender hands redden, Lord Shiva’s heart melted and after having taught him the Panchakshara Mantra, he blessed him with a pair of Golden hand cymbals (Thalams)! The thalams, however, did not emanate any sound. Devi, with her heart overflowing with compassion, gave sound to those Thalams! Since then, the Swami and Ambal started blessing the devotees as ‘Sri Thaalapureeswarar’ and ‘Osai (kodutha) Nayaki’( Devi who gave sound) respectively.

Sri Mahalakshmi:

When Lord Vishnu in his Narasimha avatar killed Hiranyakasipu and drank his blood, he developed demonic qualities and set out to destroy the worlds. On seeing this, the petrified Devas approached LordShiva and sought his merciful protection. Lord Shiva, assuming the form of Sri Sarabheswara, quelled the wrath of Sri Narasimha.Goddess Mahalakshmi, on seeing this, prayed to Lord Shiva requesting him to give back her husband. Lord Shiva asked her to perform penance in Kondrai vanam near Sirkazhi. Sri Mahalakshmi performed austere penance. Lord Shiva, pleased by her penance, got her married to Sri Vishnu. With the divine wedding taking place in the Kondrai forest, the place henceforth came to be known as ‘Thirukkolakka’ .From then, the place is known as Thirukolakka ( Thiru in Tamil – Sri Mahalakshmi, Kola – Wedding darshan of Sri Mahalakshmi and Sri Vishnu, Ka- forest)

Sri Surya Murthy

Once Surya and Indra got into an argument to decide who is mightier and better. They went to Deva Guru, Brahaspathi. Brahaspathi who advised Surya not to fight with Indra as he is the leader of all Devas. Disappointed Surya, met Sri Naradha Maharishi who advised him to perform Penance towards Shiva in Kondrai vanam near Sirkazhi. Surya created Surya Pushkarini and performed Penance for long time.

Shiva pleased with Penance of Surya and asked him for his wish. Surya asked Shiva for leadership of all 3 worlds and his devotees to receive health, wealth and prosperity. Shiva granted the boons and made Surya as leader for Navagrahas. Surya received these boons on a Sunday of Karthika month (October- November). Every year on Sundays of Karthika month , Surya Pooja performed for Panchamurthis .

Murthy:

Sri Dwanipradhambal Samedha / Sri Thaalpureeswara Swamy

Sthalam:

Thirukolakka (Aaragvanam)

Theertham:

Surya Pushkarini

Sthala Vriksham :

Kondrai (Cassia Siamea)

Temple Timings:

Morning 7:30am – 11:30 am

Evening: 4:30pm – 7:30pm

திருக்கோவில் திரு வரலாறு

திருகோலக்கா திருத்தலம் 15ஆவது பாடல் பெற்ற திருத்தலம். இக்கோவில் சோழர் காலத்தில் செங்கல் கட்டமைப்பாக இருந்தது. பின்பு நகரத்தார் கருங்கல் கட்டமைப்பாக கட்டினார்கள். கோவில் கிழக்கு மேற்காக 230 அடி நீளமும், வடக்கு தெற்காக 155 அடி அகலமும் கொண்டு அமைந்துள்ளது. சூரிய புஷ்கரிணி கோவிலினின் முன்பு அமைந்துள்ளது. ஸ்வாமி, அம்பாள் சன்னிதிகள் 4 பிரகாரங்களுடன் எழிலாக உள்ளன.

7ஆம் நூற்றாண்டின் முன்பு ஸ்வாமி ஆரக்வநேஸ்வரேர்  என்றும் அம்பாள் அபீதகுஜாம்பாள் என்றும் பெயர் கொண்டு அருள் புரிந்தனர். அப்போது இந்தத் தலம், கொன்றை வனமாக இருந்தது.

இக்கோவிலில், பெரிய பிள்ளையார், மஹாலக்ஷ்மி, வள்ளி தேவசேனா  சுப்ரமண்யர், தக்ஷிணாமூர்த்தி, சூரியன், சந்திரன், அருள்மிகு நால்வர், பஞ்ச லிங்கம் அமைந்து அருள் சொரிகின்றனர். கோவிலின் முன்பாக சூரிய புஷ்கரணி தண்ணருள் தருகின்றது. தென் கிழக்கு பாகத்தில், மும்மூர்த்தி வடிவாக, ஒரே வேரில், மூன்று மரங்களாக கொன்றை மரம், தல விருட்ஷமாக திகழ்கிற்து.

ஞான சம்பந்தர்

சைவக் குரவர்களில் ஒருவரான திருஞான சம்பந்தர் சிவ பெருமானின் மைந்தனான திருமுருகனின் அவதாரமெனக் கருதப் படுகிறார். அவர் சிவபாத இருதயருக்கும், பகவதி அம்மைக்கும் மகவென பிரம புரமாம், சீர்காழியில் அவதரித்தார்..3 வயதுப் பருவத்தில், தந்தையுடன் அடம் பிடித்து பிரம தீர்த்ததில் நீராடச் சென்றார். தந்தையார் குளத்தில் முழுகியதும், அவரைக் காணாது திகைத்த குழந்தை கோவில் கோபுரத்தை நோக்கி ’ அம்மே, அப்பா” என அழுதது. கருணைக் கடலான சிவபெருமான்  உமையம்மையை பாலூட்டுமாறு பணித்தார். உமையம்மையும் ஒரு பொற்கிண்ணத்தில் தன் ஞான முலைப்பாலை தந்தருளினார்.

குளித்து வந்த சிவபாத இருதயர், வாயில் பாலொழுக நின்ற குழைந்தையை கண்டார். யார் கொடுத்த எச்சிற் பாலைக் குடித்தனை என்று கடிந்தார். ஞானக் குழைந்தை கோபுரத்தை நோக்கி "தோடுடைய செவியன் " என தேவார மழை பொழிந்தது. அனைவரும் அதிசயமுற்று ஞானசம்பந்தரை வணங்கினர். மறுநாள் ஞானசம்பந்தப் பெருமான் திருத்தல யாத்திரை தொடங்கினார். கொன்றை வனமாம் திருக்கோலக்காவை அடைந்தார். ஆரக்வநேசரைக் கண்டு "மடையில்  வாளை பாய " எனத் தொடங்கும் எழில் மிகு பண்ணைக்  கைத் தாளமிட்டுப் பாடினார். தாளமிட்டதால் குழைந்தையின் பூங்கரங்கள் சிவந்தன. இறைவன் நெஞ்சம் நெகிழ்ந்தது.. இறைவன் ஞானசம்பந்தருக்கு பஞ்சாட்சர உபதேசம் செய்து பொன்னாலான தாளங்களை அருளினார். அத் தாளங்களில் ஒலி வரவில்லை . அம்பாள் கருணை பொங்க ஓசை கொடுத்தருளினாள். அன்று முதல், இறைவன்  தாளபுரீஸ்வரர் என்றும், இறைவி ஓசை கொடுத்த நாயகி என்றும் பெயர் கொண்டு அடியவர்க்கு அருளுகின்றனர்.

ஸ்ரீ மகாலட்சுமி:

ஹிரண்ய கசிபுவை சம்ஹாரம் செய்த நரசிங்கப் பெருமான், அவனது இரத்தத்தைக் குடித்ததனால் அசுர குணம் கொண்டு உலகங்களை அழிக்க முற்பட்டார். அதனைக்  கண்டு அஞ்சிய தேவர்கள் சிவ பெருமானிடம் தஞ்சம் புகுந்தனர். சிவபெருமான், சரபேச்வர உருவம் கொண்டு நரசிங்கரின் உக்கிரத்தைத் தணித்தார். அது கண்ட மகாலக்ஷ்மி, சிவனிடம் கணவரை வேண்டினார். சிவபெருமான் மகாலக்ஷ்மியை கொன்றை வனத்தில் தவம் செய்யப் பணித்தார். மகாலக்ஷ்மியும் கொன்றை வனத்தை வந்தடைந்து கடும் தவம் புரிந்தார். அவர் தவத்திற்கு மகிழ்ந்த சிவன், அவருக்கு திருமாலுடன் மணம்  செய்து அருளினார். திருமகள் திருமணக் கோலம் கொண்டதனால் திருக்கோலக்கா என இத்தலம் பெயர் கொண்டது.

ஸ்ரீ சூரிய முர்த்தி:

ஒருமுறை, சூரியனுக்கும் இந்திரனுக்கும், யார் பெரியவர் என்று வாதம் வந்தது. அப்போது, தேவகுரு சூரியனிடம், இந்திரன் தேவர்களின் தலைவன் என்பதால் அவர்களிடையே வாதம் பொருந்தாது என்றார். இதனால் மனம் வருந்திய சூரியன், நாரதரைக் கண்டு தன் குறையைக் கூறினான். நாரதரும், சூரியனை கொன்றை வனம் சேர்ந்து அருளுருவாகிய ஆரக்வநேசனைத் தொழுது தவஞ் செய்யப் பணித்தார். சூரியனும் கொன்றை வனம் வந்தடைந்து சூரிய புஷ்கரிணி எனும் தடாகத்தைச் செய்து, இறைவனை நோக்கி கடுந்தவம் புரிந்தான். அவன் தவத்திற்கு மகிழ்ந்த அண்ணல் அவன் முன் தோன்றி வரமருள, சூரியன் மூவுலகிற்கும் தலைவனாகவும், தன்னை வணங்கும் அடியவர்க்கு நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் பெறவும் வரம் கேட்டான். சிவனார் அவ்வரங்களைத் தந்து, அவனை ஒன்பது கோள்களுக்கும் தலைவனாக்கினார். இவ்வரம் பெற்ற நாள் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக் கிழமையாகும். இன்றும், ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை ஞாயிறன்று பஞ்ச மூர்த்திகளும் சூரியபுஷ்கரிணி முன்பு காலை 6.00 மணி அளவில் சூரிய பூசனை ஏற்கின்றனர்

மூர்த்தி:

ஸ்ரீ த்வனிப்ரதாம்பாள் சமேத ஸ்ரீ / Sri தாளபுரீஸ்வர ஸ்வாமி

தலம்:

திருக்கோலக்கா (கொன்றை வனம்)

தீர்த்தம்:

தீர்த்தம்:சூரிய புஷ்கரிணீ

தல மரம்:

கொன்றை

கோவில் திறக்கும் நேரம்:

காலை : 7:30 – 11:30 மணி

மாலை : 4:30 – 7:30ம ணி வரை.