Miracle in this century:

In the year 1979, May 15th morning by 11am one couple with their 10 year old son visited the temple. The child sung Stala Thevaram “ Madaiyil Vaazhai..”. Then they offered prayers to the temple.

The child was unable to speak or hear till 7 years. They received advise to pray to Sri Osai Nayaki, who blessed Sound to Thalams of Thrugnana Sambandhar. They did so and next morning, the child started speaking and got his defects cured. Happy parents trained the child in Thevaram songs and brought the child and offered pujas to the temple.

Till now 227 devotees got back their hearing and speaking abilities. These incidents are recorded by Devotees in temple visitors book.

In 2015, one person lost his hearing ability of left ear. He got back his hearing in 72 hours and offered pujas to Osai Nayaki.

நிகழ்காலஅற்புதங்கள்

ஒரு தம்பதியினர் தமது 10 வயது மகனுடன் இக்கோவிலுக்கு 1979ஆம் ஆண்டு மே மாதம் 15அன்று காலை 11 மணி அளவில் வந்தனர். அக் குழைந்தை "மடையில் வாளை பாய" என்ற தலத் திருப் பதிகத்தைப் பாடினான். அம் மகவு , 7 வயது வரை பேசவில்லை என்றும் , ஓசை நாயகியை வேண்டினால் பேசும் திறம் வருமெனவும் கொண்டு, அவளை வேண்டிக் கொண்டனர். மறு நாள் காலை மகவு, "அம்மா" என அழைத்து பேசத் தொடங்கியது. இன்று வரை 227 பேர் இறைவி அருளால் பேசும் திறமும், கேட்கும் திறமும் பெற்றுள்ளனர். அவர்கள் தங்கள் அனுபவத்தை திருக்கோவில் பதிவேட்டில் பதிந்துள்ளனர்.

2015இல், ஒருவருக்கு, இடது காது கேட்காமல் போனது. ஒசைநாயகியை அவர் வேண்ட 72 மணி நேரத்தில் கேட்கும் திறம் திரும்பக் கிடைத்தது. ஓசை நாயகி இவ்வாறுஅனைவர்க்கும் அருள் மழை பொழிகிறாள்.